சென்னை: தவெக தலைவர் இன்று பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களை சந்திப்பதாக அறிவித்த நிலையில், அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, கடலூரில் இன்று பிரசாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அதையும் ரத்து செய்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் இன்று கடலூரில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடலூரில் ரோடு ஷோ நடத்த அனுமதி கிடைக்கவில்லை என்றும், மஞ்சள் நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பு பிரச்சாரத்தை ரத்து செய்ததாக தெரிய வந்துள்ளது.
அதுபோல சென்னை பெரம்பூரில் நடை பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி அந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தவெக தலைவர் விஜய் மக்களை சந்திப்பில் இருந்து ஒதுங்குவது தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் தகித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் காலை, மதியம், மாலை என்று 3 நேரங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய கட்சி தலைவர்கள் உள்பட சிறு கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் பரம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சொகுசு வாழ்க்கையில் திளைக்கும் தவெக தலைவர் விஜய் 3வது முறையாக கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் சென்னை பிரச்சாரம் முடிவடைந்து ஒரு சில நாட்களை கடந்த நிலையில், இன்னும் அடுத்த பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்கிறார். இது தவெக தொண்டர்களிடையே சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்கள் கூட்டத்தை சமாளிக்க தெரியாமல், அதை காரணம் காட்டி, மக்களை சந்திக்காமல் இருப்பது தவெகவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர.
[youtube-feed feed=1]