சென்னை: வாயால் வடை சுடுபவர் அமித்ஷா  என்றும், அவர்  என்றைக்காது சொன்னதை செய்திருக்கிறாரா?” அமைச்சர் ரகுபதி காட்டமாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு கொண்டு வந்த பெண்கள் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் தேர்ல்வி அடைந்தது. இந்த மசோதாவுக்கு பெரும்பான்மை கிடைக்கத நிலையில், எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில்,   புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் ரகுபதி , எடப்பாடி பழனிசாமிக்கு என்ன பேசுவது எதைப்பேசு வது என்று ஒன்றும் தெரியவில்லை. அவர் தூங்காமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால், அவர் என்ன சொன்னாலும் அது உளறல். எடப்பாடியின் உளறருக்கு எல்லாம் நாம் பதில் அளிக்கவேண்டியது இல்லை என்றவர்,

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது,  பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது திமுக. எனவே நாங்கள் பெண்களுக்கு துரோகம் செய்யவே மாட்டோம். எனவே பெண் வாக்காளர்கள்தான் எங்களுடைய வாக்கு வங்கி. அந்த வாக்குவங்கியில் கையை வைப்பதற்காக இப்படி ஒரு சதிச்செயலை அவர்கள் செய்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்ப மாட்டார்கள் என்றார்.

 இந்த மசோதாவை தேர்தல் நடக்கும் நேரத்தில் கொண்டு வர அவசியமே கிடையாது. ஆனால், இதை அவசரமாக கொண்டு வந்ததே தேர்தல் நடக்கும் மாநிலங்களில் ஏதேவது பிரச்சனையை கிளப்பிவிடலாமா என்கிற கண்ணோட்டத்தில்தான் என்றவர்,   எந்த பிரச்சனையையும் அவர்கள் கிளப்பமுடியாது. தமிழ்நாட்டு மக்களையும் எங்கள் தலைவரையும் பிரிக்க முடியாது என்று சாடியவர்,  அமித் ஷா வாயால் சொல்வதை என்றைக்காவது செய்திருக்கிறாரா? வாயால் வடை சுட்டுவிட்டு போய்விடுவார். ஏமாற்றிவிடுவார்.

இவ்வாறு  கூறினார்.

[youtube-feed feed=1]