சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க வைக்கிறது திமுக என்பது விகடன் செய்தி நிறுவனம் நடத்திய சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது.
விகடதமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை தவெகவும் களமிறங்கி உள்ளதால் 4 முனை போட்டி எழுந்துள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், விகடன் பத்திரிகை வெளியிட்டுள்ள சர்வே முடிவில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் யார் அடுத்த முதல்வராக விரும்புகிறீர்கள் என்கிற கேள்விக்கு விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் கருத்து அறிய விகடன் குழுமம் களமிறங்கியது. இந்த பணியில், 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது.
உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் தனி செயலி உருவாக்கப்பட்டு, அதன்முலம் டிஜிட்டல் சர்வே எடுக்கப்படடது. எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது. தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் சர்வே நடத்தப்பட்டதாக விகடன் தெரிவித்துள்ளது.
இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மெகா சர்வே மேற்கொண்டனர். அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையா தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா என்கிற கேள்விக்கு 62 % மக்கள் ஆம் என்றும், 38 % மக்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்கிற கேள்விக்கு திமுக 37.50 %, அதிமுக 33.63 %, தவெக 24.71 %,, நாம் தமிழர் 2.71% ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டுமென விரும்புகிறீர்கள் என்கிற கேள்விக்கு விஜய்க்கு 44%, ஸ்டாலினுக்கு 28%, எடப்பாடி பழனிசாமிக்கு 25%, சீமானுக்கு 3% மக்கள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் எந்த கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெறும் என்கிற கேள்விக்கு, திமுக கூட்டணிக்கு 36% மக்களும், அதிமுக கூட்டணிக்கு 33% மக்களும், தவெகவுக்கு 27 % மக்களும், நாம் தமிழர் கட்சிக்கு 3% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாருக்கு எவ்வளவு சீட் திமுக கூட்டணியில், திமுக 97 சீட்கள், காங்கிரஸ் 10, தேமுதிக 4, சிபிஎம் 4, விசிக 3, சிபிஐ 2, மதிமுக 1 என மொத்தம் 121 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் அதிமுக 75 தொகுதிகள், பாமக 2, அமமுக , பாஜக தலா 2, புரட்சி பாரதம் 1 தொகுதி என மொத்தம் 83 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தவெக 3 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு, மற்றும் ஆர்கே நகர் தொகுதியியல் தவெக வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 தொகுதிகளில் இழுபறியில் உள்ளதாக சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்கிற கேள்விக்கு தனிக்கட்சி ஆட்சி என்று 55.9% மக்களும், கூட்டணி ஆட்சி என்று 32.1% மக்களும், தொங்கு சட்டமன்றம் என்று 12% மக்களும் கருத்து கூறியுள்ளனர்.
எதிர்கால தமிழக அரசியலில் இவர்களில் யார் முக்கியமான தலைவராக இருப்பார்கள் என்கிற கேள்விக்கு, விஜய்க்கு 47.25% மக்களும், ஸ்டாலினுக்கு 24.9% மக்களும், எடப்பாடி பழனிசாமிக்கு 15.79% மக்களும், சீமானுக்கு 9.03% மக்களும், அண்ணாமலைக்கு 1.28% மக்களும் ஆதரவாக கூறியுள்ளனர்.
[youtube-feed feed=1]