சென்னை:

கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி அமமுக என்றும், அந்த கட்சியின்   ரிங் மாஸ்டர் டிடிவி மீது தற்போதுழ கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


இன்று சிலம்பொலி செல்வர்  மா.பொ. சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பல முன்னணியினர் சமூக அமைப்பை சேர்ந்தவர்களும் அவரது உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து  செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் ஜெயக்குமார், தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தால் கட்சி தலைமை தான் அது குறித்து முடிவெடுக்கும் என்றவர்,  சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் , தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டார்கள் என்றவர் அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பர் என யாரும் இல்லை என்றார்.

மேலும், கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாதது அமமுக கட்சியின் நிலைமை இதுதான் என்றவர்,  பணத்தை வைத்து மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், ரிங் மாஸ்டர்போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.