கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேலும் ஒரு பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது. பள்ளி மாணவிகளை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த 5 இளைஞர்கள் – கைது

தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய  குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து  சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பொள்ளாச்சி அருகே ஆலைமலை பகுதியில், மேலும் ஒரு பாலியர் சம்பவம் அரங்கேறி உள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த நண்பர்களான முகமது சபீர்,  முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ், வசந்தகுமார்  ஆகிய 5 பேரும் சேர்ந்து, அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளை காதலிக்கக் கூறி தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு சம்மதிக்ககாத மாணவிகளை திருட்டுத்தனமாகவும், வலுக்கட்டாயமாகவும் பிடித்து இழுத்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக மொபைல் போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டி வந்ததாகவும் கூறப்டுகிறது. இதுகுறித்து சில மாணவிகள் அவர்களின் பெற்றோர்களிடம் கூற, அவர்கள் அந்த கும்பலிடம் விசாரித்தபோது, அவர்களிடமும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள் காவல்துறையில்  புகார் அளித்ததை தொடர்ந்து,  ஆனைமலை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, படம் எடுத்து மிரட்டி 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.