சென்னை:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களின் பரிசீலனை நடைபெற்று வருகிறது. தங்களது விண்ணப்பத்தின் தற்போதைய  நிலை என்ன என்பது குறித்து ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டு மருத்துவம் பல் மருத்துவ படிப்புகளுக்கு 59,756 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜூலை 4ந்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தற்போது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து , தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளன என்பதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து கீழே உள்ள இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்…

http://192.169.153.136/MBBSTRACKING2019/

இணையதளத்தில் உள்ள கட்டத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து  சப்மிட் செய்தால் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்த தெரிந்து கொள்ள முடியும்.

‘எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் நாளில், சிறப்பு பிரிவு மற்றும் பெருந்துறை ஐஆர்டி கல்லூரியின் தொழிலாளர்களின் வாரிசுகள் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது

.அதைத் தொடர்ந்து, 5-ம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் திரும்பக் கிடைத்ததும், இரண்டாம் கட்ட கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.