சென்னை:

மிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து சட்டசபை கூட்டம்  ஒத்தி வைக்கப்பட்டது.

இன்றைய விவாதத்தின்போது பேசிய டிடிவி தினகரன், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தனது கன்னிப்பேச்சை சட்டசபை வரலாற்றில் பதிவு செய்தார்.

சட்டமன்றத்தின் 2வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அதையடுத்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஒக்கி புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அவை முன்னவர் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து தனது முதல் கன்னிப்பேச்சை பதிவு செய்தார்.

அப்போது, ஆளும் அரசு,  “ஜெயலலிதா அரசு என்பதை நிரூபிக்கும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

டிடிவி தினகரனின் தொழிலாளர்களுக்கு ஆதரவான முதல் பேச்சு அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.