"முதல்வர்" ஆவதே லட்சியம்! : த்ரிஷா

Must read

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் – த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் கொடி. இந்தத் திரைப்படம், நாளை  தீபாவளி அன்று  வெளியாகிறது.  இந்த படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் த்ரிஷா.
a
இந்த திரைப்பட பிரமோஷனுக்காக செய்தியாளர்களை சந்தித்த த்ரிஷா,  அப்போது, “படத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறீர்கள். நிஜத்தில் அரசியலுக்கு வருவீர்களா” என்று கேட்டதற்கு, “ஹய்யோ… எனக்கு பாலிடிக்ஸ் வேண்டாம்பா” என்று பயந்துபோய் சொன்னார்.
அதே நேரம், ”தமிழக முதல்வர் அம்மா போல தைரியமான பெண்மணியை பார்க்கவே முடியாது.  ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஆளும் அவரது நிர்வாகத்திறன் வியக்க வைக்கிறது” என்றெல்லாம் புகழ்ந்தார்.
“முதல்வர் மீது உங்களுக்கு இத்தனை அபிமானமா” என்று கேட்டதற்கு “ஆமாம்… முதல்வர்  அம்மாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானால் அதில் நடிக்க ஆவலாக  இருக்கிறேன். இதை என் வாழ்க்கை லட்சியம் என்றும் சொல்லலாம்” என்றார் த்ரிஷா.
எப்படியோ, “முதல்வர்” ஆகணும்னு ஆசை வந்துருச்சு த்ரிஷாவுக்கு!

More articles

Latest article