ஹாபூர், உத்தரப் பிரதேசம்

. பி.  மாநிலத்தில் இரவு 11 மணிக்கு நடைபெற்ற இஸ்லாமிய திருமணத்தில், நள்ளிரவு 1 மணிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து நடைபெற்றுள்ளது.

உத்திரப் பிரதேச மாவட்டத்தில் ஹாபூர் மாவட்டத்தில் உள்ளது கடுமுக்தேஷ்வர் என்னும் கிராமம்.   இங்குள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் பேண் பேசி முடித்து திருமணம் முடிவு செய்தனர்.    அதன்படி திருமணம் இஸ்லாமிய முறைப்படி இரவு 11 மணிக்கு நடந்துள்ளது.

வட இந்தியாவில் அனைத்து மத திருமணத்தின் போதும் ஒரு விளையாட்டுக்காக மணமகனின் காலணியை மணமகள் வீட்டார் ஒளித்து வைப்பது வழக்கம்.  மாப்பிள்ளை வீட்டாருடன் ரூபாய்கள் பெற்றுக் கொண்டு அந்த காலணியை திருப்பி அளிப்பார்கள்.    அதன்படி இந்த திருமணத்திலும் நடைபெற்றுள்ளது.  பெண் வீட்டார் ரூ.1000 கேட்டுள்ளனர்.

மணமகனின் தந்தை, “எங்களுக்கு மிகக் குறைவாக வரதட்சணை கொடுத்து விட்டு ஆயிரம் ரூபாய் கேட்டால் எப்படி?”  என நகைச்சுவையாக கேட்டுள்ளார்.    ஆனால் இதை மணமகள் வீட்டார் நகைச்சுவையாக கருதாமல் பெண்ணை அனுப்ப மறுத்துள்ளனர்.   பிறகு இரு வீட்டாரும் கலந்து பேசி, இருவீட்டார் சம்மதத்துடன்  மணமகன் நள்ளிரவு 1 மணிக்கு மும்முறை தலாக் கூறி மணமகளை விவாகரத்து செய்தார்.  பெண் வீட்டார் அளித்த அனைத்து சீதனங்களும் திருப்பித் தரப்பட்டது.

இதை இஸ்லாமிய வழக்கப்படி கணவனை இழந்த பெண்களுக்கு கடைபிடிக்கப் படும் முறையாக அவர்கள் ஜமாத் அறிவித்துள்ளது.    இந்த முறைப்படி 100  நாட்களுக்கு இந்தப் பெண் வேற்று ஆண்களின் பார்வையில் படாமல் பிறந்த வீட்டில் இருக்க வேண்டும்.   இந்தக் கால கட்டம் முடிந்த பின் அவர் மீண்டும் மணம் செய்துக் கொள்ளும் உரிமையை பெறுகிறார்.