பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது

Must read

டில்லி

ட்ஜெட் தாக்கலுக்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.   அதையொட்டி நாளை பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.   இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத் தக்கது.

நாளை தொடங்க உள்ள தொடரில் பாராளுமன்ற இரு சபைகளிலும் ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்.  அவரது உரையில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சலுகைகள் பற்றிய தகவல்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.    இந்த பட்ஜெட் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முந்திய பட்ஜெட் என்பதால் பல சலுகைகள் மற்றும் நலத் திட்டங்கள் பட்ஜெட்டில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் பகுதி நாளை முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும்.    அதன் பிறகு விடுமுறை அளிக்கப்பட்டு இரண்டாம் கட்ட தொடர் மார்ச் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

More articles

Latest article