கூட்டணி வேண்டுமா என பாஜக முடிவெடுக்கட்டும் : சந்திரபாபு நாயுடு

Must read

வெலகபுடி,  ஆந்திரப் பிரதேசம்

தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி தேவையா என்பதை பாஜக முடிவெடுக்கட்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.    மத்தியிலும் இந்தக் கூட்டணி தொடர்கிறது.   சமீபகாலமாக ஆந்திர மாநில பாஜக தலைவர்கள் அம்மாநில அரசை தொடர்ந்து தாக்கிப் பேசுகின்றனர்.   இது ஆந்திர அரசியலில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  கூட்டணி தொடருமா என்பதே இரு கட்சித்  தொண்டர்கள் இடையே கேள்விக் குறியாக உள்ளது.

ஆந்திர மாநிலம் வெலகபூடியில் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒரு செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்.  அப்போது அவ்ர், “நாங்கள் கூட்டணி தர்மத்துக்கு உட்பட்டு எங்கள் தலைவர்களை பாஜக வை விமர்சிக்கக் கூடாது என தடுத்துள்ளோம்.    எங்கள் கோதாவரி மாவட்டக் கட்சி பிரமுகர் ஒருவர் பாஜகவுக்கு எதிராக கருத்து சொன்ன போது நான் அவரைக் கடுமையாக எச்சரித்துள்ளேன்.    எங்களுடனான கூட்டணி தேவை இல்லை என்றால் அந்த முடிவை பாஜக எடுக்கட்டும்.    நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article