தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Must read

சென்னை

ன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல தலைவர் எஸ் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுப்படி அதிகபட்சமாகத் தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை மாவட்டம் மேலூரில் தலா 3 செ.மீ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று அதாவது ஜனவரி.27ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 28-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

மேலும் 29, 30-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.  அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article