டில்லி

மலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்தினரை இன்று ராகுல் காந்தி சந்திக்க உள்ளார்.

டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது., அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

நேற்று 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். பின்பு இதன் தொடர்ச்சியாக, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை நேற்று இரவு கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்..

கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. அதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியது. ஆயினும் அவசர வழக்காக அது எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெஜ்ரிவாலுக்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தங்களுடைய ஆதரவை வழங்கினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் கெஜ்ரிவால் அல்லது அவருடைய குடும்பத்தினரைச் சந்திக்க முயல்வார் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் அவர்களுக்குச் சட்ட உதவி வழங்கவும் முடிவு செய்துள்ளது.