டில்லி

ன்று இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையே ஆன உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சியாக நடைபெறுகிறது.

பிரதமர் மோடி கட்ண்டஹ் 2015 ஆம் ஆண்டு மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிரிகிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மின்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  அப்போது முதல் அந்நாடுகளுடன் இந்தியா பல்வேறு மட்டங்களில் தொடர்பில் உள்ளது.

இன்று அதாவது ஜனவரி 27 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையே உச்சி மாநாடு காணொலி மூலம் நடைபெற உள்ளது.  இம்மாநாட்டைப் பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.  மேலே குறிப்பிட்ட நாடுகளின் அதிபர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்து பரிமாற்றம் நடைபெற உள்ளது.  தலைவர்கள் இது குறித்த கருத்துக்களை வெளியிடுவதுடன் இந்நாடுகளுடன் இந்தியாவுக்கு உள்ள உறவை புதிய உச்சிக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க உள்ளனர்.