தலைகீழாகத் தேசியக் கொடி ஏற்றம் : கேரள அமைச்சருக்குக் காங்கிரஸ் கண்டனம்

Must read

காசர்கோடு

கேரள அமைச்சர் அகமது தலைகீழாகத் தேசியக்கொடியை ஏற்றியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததால் விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

நேற்று நாடெங்கும் குடியரசு தின விழா கொண்டாட்டம் நட்ந்தது.   அவ்வகையில் கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் கேரள துறைமுகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக அமைச்சர் அகமது கலந்து கொண்டார்.

அவர் கொடி ஏற்றிய போது கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்தது.  இதனால் அங்கிருந்தோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.   உடனடியாக கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் நேராக ஏற்றப்பட்டது.  பிறகு அங்கு நடந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியதற்குக் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இதனால் அமைச்சர் தேசியக் கொடியை  தலைகீழாகக் கட்டியது யார் என விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை சூப்பிர்ண்டுக்கு உத்தரவு இட்டுள்ளார்.

More articles

Latest article