டில்லி

திர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி இன்று பதில் அளிக்க உள்ளார்.

மத்திய பாஜக அரசு மீது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.  நேற்று இந்த தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில் காங்கிரஸ் தலைவர். ராகுல் காந்தி, மணிப்பூரில் இந்தியாவை பா.ஜ.க. கொன்றுவிட்டது என்று ஆவேசமாக பேசினார்  அவருக்கு. மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இரானி, அமித்ஷா ஆகியோர் அவருக்குப் பதில் அளித்தனர்.

இன்று, நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதத்துக்குப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பார் என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில்  அறிவித்தார்.

மக்களவையில் எந்த கட்சிக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்ற விபரம் பின்வருமாறு உள்ளது..

மொத்தமுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்களில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 311 பேரில் 303 பேர் பாஜகவினர் ஆவர்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 144 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதைத் தவிர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.