டில்லி

ன்று  காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் அவ்வப்போது கூடி நீர் பங்கீட்டை சுமுகமாகச் செய்து வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடி, தமிழகத்துக்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவை வலியுறுத்தியது.

கர்நாடகா முரண்டு பிடித்ததால் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 3 ஆம் தேதி அவசரமாகக் கூடி, ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தக் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இன்றுடன் இந்த உத்தரவின் செல்லுபடி காலம் முடிவடைவதை முன்னிட்டு அடுத்துவரும் நாட்களுக்கான நீர் திறப்பை உறுதி செய்வது தொடர்பாகக் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட உள்ளது.

இன்று காலை 11.30 மணிக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து பங்கேற்க உள்ளனர்.