இந்திரா காந்தி (1917 – 1984)
இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர்.
உலக வரலாற்றில் பெண்களினாலும் ஒரு நாட்டை நிர்வகிக்க முடியுமென்ற நிலையை ஆணித்தரமாக நிரூபித்து பணியாற்றிய இரும்பு பெண்மணி இந்திராகாந்தி.
indra1
கடந்த 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் தேதி ஜவஹர்லால் நேருவிற்கும் கமலா நேருவிற்கும் மகளாக பிறந்தார் இந்திரா காந்தி என அழைக்கப்பட்ட இந்திரா பிரியதர்ஷனி.  அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது.
பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர்.

தந்தை நேருவுடன் இந்திரா
தந்தை நேருவுடன் இந்திரா

அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம்.
ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது. அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.
அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார்.
கணவருடன் இந்திரா
கணவருடன் இந்திரா

 
இந்நிலையில் அவர் தனது இளமைக் காலத்தில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது  பெரோஸ் காந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவரின் தந்தையான ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் முதல் பிரதமரும் சிறந்த கல்வி மாமேதையும் ஆவார். மேலும் சுதந்திர போராட்டங்களில் காந்தியுடன் இணைந்து செயற்பட்ட ஜவஹர்லால் நேரு மக்களிடம் பெற்ற நன்மதிப்பை அடிப்படையாக வைத்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல் தனது தந்தையின் வழியை பின்பற்றி இந்திரா காந்தி அரசியலில் நுழைந்தார்.  கடந்த 1936 ம் ஆண்டு இந்திரா காந்தியின் தாயார் கமலா நேரு உயிரிழந்த பின்னர் இந்திரா காந்தி நிலையானதொரு குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை.
இந்நிலையில் தனது கல்வியை முடித்துக்கொண்ட அவர் அரசியலில் கால்பதித்தார். அதற்கமைய 1959ம் ஆண்டு மற்றும் 60ம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
பின்னர் சில காலங்களாக தனது சிறந்த அரசியல் திட்டம் காரணமாக பல அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அவர் கடந்த 1966ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இந்திய நாட்டின் முதலாவது பெண் பிரதமராக பதவியேற்றார்.
அவர் 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் கடந்த 1977ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி வரை பிரதமர் பதவியில் திகழ்ந்தார்.
indra-old
எனினும் கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில்  மிகப்பெரிய தோல்வியை தழுவினார்.
அதன்பின்னர் தனது அயராத உழைப்பினாலும் திடமான நம்பிக்கையினாலும் கடந்த 1980ம் ஆண்டு ஜனவரி மாதம 14ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று கடந்த 1984ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் நீடித்தார்.
இதற்கிடையில் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பலம்மிக்க மூத்த தலைவர்களை புறந்தள்ளியதன் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுப்பட்டது. அதன்காரணமாக பிளவுபட்ட கட்சியின் ஒரு பகுதி இந்திரா காங்கிரஸ் எனவும் அழைக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 1971ம் ஆண்டு மேற்கு கிழக்கு பாகிஸ்தான்களுக்கிடையில் ஏற்ப்பட்ட மோதல்களை கவனத்திற்கொண்டு கிழக்கு பாகிஸ்தானின் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானுடன் போரை நடாத்தி மேற்கு பாகிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்படும் பங்களாதேசைப் பிரித்து தனிநாடாக அமைக்க உதவிபுரிந்தார்.
மேலும் கடந்த 1975ம் ஆண்டு அவசரகால சட்டத்தை அறிவித்த இந்திரா காந்தி அரசியல் சட்டத்தில் தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக்கொண்டார். எமர்ஜென்சி சட்டத்தை அமல்படுத்தினார். மிசா சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக அவர்மீது  வழக்கு தொடரப்பட்டு சுமார் 19 மாதங்கள் அவர் வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன் காரணமாக அரசியல் அரங்கில் இந்திராகாந்தியின் செல்வாக்கு பாதிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற 1977ம் ஆண்டு  தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.
இருந்தாலும், அவரது அரசியல் வாழ்வுக்கு ஓய்வளிக்காமல்,பல்வேறு அரசியல் நகர்வுகள் பல மூத்த அரசியல்வாதிகளை மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு  மீண்டும் அரசியலில் பலமிக்க பெண்மணியாக எழுந்தார். இது மூத்த தலைவர்களை  மெய்சிலிர்க்க வைத்தது.
இதேவேளை இவரின் ஆட்சிக்காலத்திலேயே இந்தியா முதலாவது அணுவாயு சோதனையை நடத்தியது.
கடந்த 1967ம் ஆண்டு ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. அது கடந்த 1974ம் ஆண்டு சிரிக்கும் புத்தர் எனும்  ரகசிய பெயருடன் ராஜஸ்தானில் நிலத்திற்கடியில்  அணு சோதனை நடத்தப்பட்டது.
இந்த அணு மூலம் இந்தியா உலகளவில் பிரபலமான நாடாக உருவெடுத்தது.  உலகில் இளம் அணுசக்தி அதிகாரமுள்ள நாடாக பிரதிபலித்தது.
மேலும் 1960 ம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் இந்திரா காந்தியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி திட்டம் நிலவி வந்த உணவுப் பற்றாக்குறை நீக்க உதவியது.
indira_gandhi4
மேலும் இந்தியாவின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்கும் அவரின் பசுமைப் புரட்சி; உதவியது. இன்றைய தினமும் குறித்த பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை அவரின் சிறந்த அரசியல் முன்னெடுப்புகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாதம் வளர்ந்து வந்த காலப்பகுதியில் தீவிரவாதிகளை அழிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.  பஞ்சாப் மாநிலத்திலுள்ள பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு  இந்திய இராணுவத்திற்கு பொற்கோயிலுக்குள் சென்று தாக்குதல் நடத்த இந்திரா காந்தி அனுமதி வழங்கினார்.
இந்த தாக்குதல்  விசயம் சீக்கிய மக்களிடையே ஆறாத வடுவை ஏற்படுத்தியது.  மேலும் சீக்கிய தீவிரவாதிகள் மீது இந்திரா காந்தி தொடர்ச்சியாக மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அவர் மீதான வெறுப்பு சீக்கியர்களுக்கு மேலும் அதிகரித்தது.
indra
இந்நிலையில் கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் திகதி புதுடில்லியிலுள்ள தனது இல்லத்தில் வைத்து தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அவர் தனது முதலாவது புதல்வரான சஞ்சய் காந்தியை தனது தேர்ந்தெடுக்கப்படட அரசியல் வாரிசாக வளர்த்து வந்தார்.  ஆனால் அவர் ஒரு விமான விபத்தில் பலியானார்.
இந்திராவின் மரணத்தையொட்டியே விமான பைலட்டாக இருந்த ராஜீவ் காந்தி, காமராஜர் போன்ற முக்கிய தலைவர்களின் வற்புறுத்தலால்  இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்று இந்திய வரலாற்றில் சர்வதேச ரீதியில் வல்லமைமிக்க ஒரு நாடாக மாற்றிய பெருமைக்குரியவர் இந்திரா காந்தி.
மேலும் இந்திய நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இந்திரா காந்தி இந்திய நாட்டின் இரும்புப் பெண்மணி என்று சொல்லும் அளவிற்கு தனது சீரான ஆட்சியை மேற்கொண்டு உலகளாவிய ரீதியில் அனைவரது மனதிலும் இடம்பிடித்த தலைவர்களில் ஒருவராவார்.