சென்னை

ன்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் உண்ணாவிரதத்தில் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அண்மையில் ‘நீட்’ தேர்வில் தமிழகத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து அள்நர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் கூட்டத்தை சமீபத்தில் நடத்தியபோது அவர், ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.

குரோம்பேட்டையில் ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்த பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19) என்ற மாணவர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை செல்வசேகரும் உயிரை மாய்த்துக்கொண்டதால் ‘நீட்’ தேர்வு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இன்று ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்கிறார்கள். தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும், பொதுமக்களும் கருத்துகளை கூற உள்ளனர்.

சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.  இப்போராட்டத்தை தி.மு.க. பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.

போராட்டத்தில் தி.மு.க. மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கனிமொழி, செயலாளர் டாக்டர் எழிலன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, வேலு, இளைய அருணா, தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், எம்.சண்முகம், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.கிரிராஜன், இளங்கோ, வில்சன், மாணவர் அணி இணை செயலாளர் மோகன், இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி ஜோயல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.