சென்னை
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெற உள்ளது. பல்வேறு முக்கிய அறிவுப்புகள் இந்த கூட்டத்தொடரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.