டில்லி

ன்று மாலை கார்கே தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் கூட உள்ளது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க. தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலைக் கடந்த 2 ஆம் தேதி வெளியிட்டது.

கடந்த 7 ஆம் தேதி காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. பிறகு இதனைத் தொடர்ந்து, கடந்த 8 ஆம் தேதி அக்கட்சி 39 மக்களவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அடங்கிய பட்டிலை வெளியிட்டது.

இன்று மாலை 5 மணிக்குக் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் 2-வது கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே தலைமையில் கூடுகிறது. கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவரான சோனியா காந்தி,. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அப்போது கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், அரியானா, தமிழகம், புதுடெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளைப் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வெளியான காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், சத்தீஷ்கார், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.