சென்னை: 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில், 11 மாவட்டங்களின் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பணியிடங்களக்கு இன்று முதல் ஜனவரி 13ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம என்றும், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான,  http://tnpsc.gov.in, http://tnpscexams.in  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி  நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதல் நிலை தேர்வு ஏப்ரல் 9ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி போட்டி தேர்வு நடைபெறும். முதல் நிலை தேர்வில் தமிழ் மொழி பிரிவில் 40 மதிப்பெண்கள் தகுதி பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும். முதன்மை தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.