சென்னை: ஆவின் பாலகங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் மற்றும் கேக் வகைகளை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார்.

அரசு பால்பொருள் நிறுவனமான ஆவின், பண்டிகைகளையொட்டி புதுப்புதுப் இனிப்பு வகைகளை அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு பல்வேறு இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது,  கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் மற்றும் கேக் வகைகள் அறிமுகம் செய்துள்ளது.

இந்த கேக் மற்றும் இனிப்பு வகைகளை பால்வளத்துறைஅமைச்சர் நாசர் இன்று அறிமுகப்படுத்தி வைத்தார். விருகம்பாக்கத்தில் உள்ள அதிநவீன ஆவின் பாலகத்தில் நடைப்பெற்ற சிறப்பு மிக்க நிகழ்வில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், இக்கேக்கு வகைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.  இவ்விழாவில் மதுரவாயில் தொகுதி எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி, பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர். ந. சுப்பையன் இ,ஆ,ப., இணை மேலாண்மை இயக்குநர்  திருமதி. K.M. சரயு இ,ஆ,ப. மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதன்படி, கிறிஸ்துமஸ், புத்தாண்டை  முன்னிட்டு நுகர்வோர் கொண்டாடும் வகையில் சிறப்பு கேக் வகைகளான பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பில் கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக்,  பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக் கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கேக் வைககள் 800 கிராம், 400 கிராம் மற்றும் 80 மி கிராம் அளவுகளில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், எப்போதும் போல, ஆவின் பொருட்களை பொது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி பயன்படுத்தும் படி ஆவின் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் மேற்கண்ட கேக் வகைகள் மற்றும் சிறப்பு இனிப்புகளை மொத்தமாக ஆர்டர் செய்ய பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

சென்னை    தலைமை அலுவலகம்     : 7358018395
சென்னை – வடக்கு மண்டலம்        : 9566860286
சென்னை – மத்திய மண்டலம்        : 9790773955
சென்னை – தெற்கு மண்டலம்        : 9444728505
கட்டணமில்லா எண்                 : 18004253300    
மின்னஞ்சல் முகவரி                 : aavinspecialorders@gmail.com     

ஆவின் கேக் வகைகள் விலைப்பட்டியல்

 • பிளாக் பாரஸ்ட் கேக் (Black Forest cake) – 800கி/400கி/80கி – ரூ.560/ரூ.280/ரூ.70
 • சாக்கோ ட்ரிபில் கேக் (Choco Truffle cake) – 800கி/400கி – ரூ.700/ரூ.350
 • ஸ்ட்ராபெரி கேக் (Strawberry cake) – 800கி/400கி/80கி – ரூ.720/ரூ.360/70
 • பைனாப்பில் கேக் (Pine Apple cake) – 400கி/80கி – ரூ.360/ரூ.70
 • ஒயிட் ஃபாரஸ்ட் கேக் (White Forest cake) – 800கி/400கி/80கி – ரூ.720/ரூ.360/ரூ.70
 • பட்டர்ஸ்காட்ச் கேக் (Butter Scotch cake) – 800கி/400கி/80கி – ரூ.800/ரூ.400/ரூ.70
 • ரெயின்போ கேக் (Rainbow cake) – 400கி/80கி – ரூ.500/ரூ.70
 • பிளாக்கரண்ட் கேக் (Black Current cake) – 400கி/80கி – ரூ.390/ரூ.70
 • ரெட் வெல்வெட் கேக் (Red Velvet cake) – 400கி/80கி – ரூ.600/ரூ.70
 • மேங்கோ கேக் (Mango cake) – 800கி – ரூ.720
 • ப்ளூ பெர்ரி கேக் (Blue Berry cake) – 800கி – ரூ.840
 • ஜெர்மன் பிளாக் பாரஸ்ட் கேக் (German Black Forest cake) 800கி/80கி – ரூ.780/ரூ.70