2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது  என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்துள்ளது.
கடந்த  2015 ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி டி.என்.பி.எஸ்.சி புதிய உறுப்பினராக 11 பேரை அதிமுக அரசு நியமனம் செய்தது
“இந்த 11 பேரும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள்.  முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தததால் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு நிர்வாக திறன் இல்லை” என்று பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டின.
அதோடு, இந்த 11 உறுப்பினர்களின் நியமனத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் டிகேஸ்.இளங்கோவன், பா.ம.க சார்பில் வரக்கறிஞர் பாலு, புதிய தமிழகம் சார்பில் நிறுவனர் கிருஷ்ணசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விதிமுறைகளை மீறி TNPSC க்கு 11 உறுப்பினர்களை நியமனம் செய்தது செல்லாது என கூறி அவர்கள் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.