சென்னை: குரூப் 3 போட்டித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 சர்வீஸ் எக்ஸாம் தீயணைப்பு நிலைய அதிகாரி , ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்), உதவி மேற்பார்வையாளர் (தொழில்துறை கூட்டுறவு சங்கம்), கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.

குரூப் 3 பதவிகளுக்கு பட்டதாரிகள் அல்லது 12 ஆம் வகுப்பில் 60% தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TNPSC குரூப் 3 பதவிகளுக்கு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். பகுதி A பொதுத் தமிழ் – 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் மதிப்பெண்கள் 60 பெற்றால் பாஸ். பகுதி B பொது அறிவு. 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். 100 வினாக்கள் கேட்கப்படும். 150+150 = 300 -க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும். விடைத்தாளின் பகுதி-A இல் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 40% (அதாவது 60 மதிப்பெண்கள்) பெற்றிருந்தால் மட்டுமே பகுதி- B மதிப்பீடு செய்யப்படும். பகுதி-A மற்றும் பகுதி-B ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படும்.

குரூப் 3 தேர்வுக்கான பாடத்திட்டமாக பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சம்மோக அரசியல் இயக்கங்கள், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (புத்திக்கூர்மை) ஆகிய தலைப்புக்கள் அடங்கும்.

இந்த தேர்வு குறித்து கடந்த ஆண்டே வெளியான நிலையில்,  குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது  டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது. குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது