மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை  சித்திரை திருவிழாசப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகர்வான   கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 5ந்தேதி நடைபெறுகிறது. இது தொடர்பான  முழு விவரம் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்ஃசெயல் அலுவலர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 1432-ஆம் பசலி 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் வருகிற 26.01.2023ஆம் தேதி தை மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமையன்று தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் காலை 8.15 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 3.15 மணிக்கு மேல் 4.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் சப்பர முகூர்த்த நிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை பூச தெப்பத்திருவிழா முடிந்து மாசி மாத திருவிழாக்கள், பங்குனி உத்திர திருவிழாக்கள் முடிந்த பின்னர் சித்திரை மாதம் திருவிழா தொடங்கும். இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 1ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறும். மே 3ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.  மே 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

மதுரை சித்திரை திருவிழா 2023  – ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேதிகள் விவரம்:

சப்பர முகூர்த்தம் வருகிற 26.01.2023ஆம் தேதி தை மாதம் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்குகிறது.

23 ஏப்ரல் 2023 – ஞாயிறு – சித்திரை திருவிழா கொடியேற்றம் கொடியேற்றம் – கற்பக விருட்சம், சிம்ம வாகனம்

24 ஏப்ரல் 2023 – திங்கள் – பூத, அன்ன வாகனம்

25 ஏப்ரல் 2023 – செவ்வாய் – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

26 ஏப்ரல் 2023 – புதன் – தங்க பல்லக்கு

27 ஏப்ரல் 2023 – வியாழன் – வேடர் பரி லீலை – தங்க குதிரை வாகனம்

28 ஏப்ரல் 2023 – வெள்ளி – சைவ சமய ஸ்தபித வரலாற்று லீலை – ரிஷப வாகனம்

29 ஏப்ரல் 2023 – சனிக்கிழமை – நந்தீகேஸ்வரர், யாழி வாகனம்

30 ஏப்ரல் 2023 – ஞாயிறு – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்ஹாசன உலா

1 மே 2023 – திங்கள் – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

2 மே 2023 – செவ்வாய் – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகல்யாணம் (வான திருமண) – யானை வாகனம், புஷ்ப பல்லக்கு

3 மே 2023 – புதன் – திரு தேர் – தேரோட்டம் (ரத உற்சவம், தேர், தேர் திருவிழா) – சப்தவர்ண சப்பரம்

4 மே 2023 – வியாழன் – தீர்த்தம், வெள்ளி விருட்சப சேவை

கள்ளழகர் (கள்ளழகர்)

4 மே 2023 – வியாழன் – தல்லாகுளத்தில் எதிர் சேவை

5 மே 2023 – வெள்ளி – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
– 1000 பொன்சப்ரதுடன் – வண்டியூரில் இரவு சைத்யோபாச்சரம்

6 மே 2023 – சனிக்கிழமை
– திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கால் அழகர் – வண்டியூர் தேனூர் மண்டபம் – சேஷ வாகனம் காலை
– மதியம் கருட வாகனம் – மாண்டுக மகரிஷிக்கு மோக்ஷம்
– இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி

7 மே 2023 – ஞாயிறு
– காலை மோகனாவதாரம்
– மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் இரவு கள்ளழகர் திருக்கோலம்

8 மே 2023 – திங்கள்
– ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருளல்