சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு அதிக வெயில் வாட்டி வதைக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பத குறித்து,. வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அப்போது,   எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கி உள்ள நிலையில்,   வரும் 6-ஆம் தேதி வரை  தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியளார்களிடம் பேசிய  சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்,   தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்கள் மே 6 வரை வெப்ப அலை வீசும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

 இன்று (மே 4ந்தேதி) முதல் அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில் முதல் 7 நாள்கள் அதிக வெப்பநிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41 – 4 2 டிகிரி செல்சியஸும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 39-40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 – 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

வெப்ப அலைக்கு காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் இல்லை, கோடை மழை குறைந்ததால் வெப்பநிலை அதிகரித்துள்ளது என்று கூறியவர்,  எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல்  மாதம் தொடங்கி 27 நாள்கள் ஈரோட்டில் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வெப்பமான  கோடை மழை பெய்யும்போது  குறைய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. பாலக்கோடு (தர்மபுரி), மாரண்டஹள்ளி, பாரூர்(கிருண்ணகிரி), மேலாலத்தூர் (வேலூர்), பையூர் (கிருஷ்ணகிரி) ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த 5 நாள்களில் உள்மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மே 7ல் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெப்ப நிலையைப் பொறுத்தவரையில், ஒரு காரணத்தை வைத்து கணிக்க முடியாது என்றவர்,  லோக்கல் எஃப்க்ட் மற்றும் லார்ஜர் எஃப்க்ட் இரண்டும் இருக்க வேண்டும். மலைப்பகுதியைப் பொறுத்தவரையில், 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த மலைப்பகுதி இப்போது இல்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சூரிய வெளிச்சம் பூமியில் விழுந்து செல்கிறது. கோடை மழை குறைவாக இருந்திருக்கிறது.

மழை குறைவாக இருக்கும் போது, மண்ணின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இதனால், சூரிய வெளிச்சத்தை நேரடியாக ஈர்க்கும் தன்மை உள்ளது. இதனால் அதனுடைய தன்மை மாறும். இதன் விளைவுகளால் வெப்ப நிலை மாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. பொதுவாக எல்- நீனோ முக்கிய காரணியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 6ஆம் தேதி வரை வெப்பம் தொடரும். கடலோர மாவட்டங்களில் கோடை மழைக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.