சென்னை: டிஎன்பிஎல் 2023 ஏலம் நிறைவு பெற்றது. இந்த ஏலத்தில்,  சாய் சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கும், ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவை ரூ.17.60 லட்சத்துக்கும் ஏலம் போயுள்ளனர்.

டிஎன்பிஎல் 2023 ஏலம்  மகாபலிபுரத்தில் நடைபெற்றது.  இதில் மொத்தம் 942 வீரர்கள் பங்கேற்றனர். ஏலத்தில் வீரர்களுக்கான அதிகபட்ச அடிப்படை விலை ரூ.10 லட்சம் என்றாலும், ரவிச்சந்திரன் அஸ்வின், நாராயண் ஜெகதீசன் மற்றும் ஷாருக்கான் போன்ற முக்கிய வீரர்கள் தங்கள் உரிமையாளர்களால் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய விஜய் சங்கரை 10.25 லட்சத்துக்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியும்,

வாஷிங்டன் சுந்தரை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

மூன்றாவது வீரராக  சேலம், நடராஜனை 6.25 லட்சத்துக்கு திருச்சி அணியும்,

சந்தீப் வாரியரை நெல்லை அணி ரூ.8.5 லட்சத்துக்கும் எடுத்தது.

சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.

ஐ.பி.எல். போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது. அவர் ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் போனார்.

சஞ்சய் யாதவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

இதன்மூலம் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக தொகையாக இது இருந்துள்ளது.  முன்னதாக, ஹரிஷ் குமாரை 12.80 லட்சத்துக்கும் அபராஜித்தை ரூ.10 லட்சத்துக்கும் பிரதோஷ் 5 லட்சத்துக்கும் அதே அணி விலைக்கு வாங்கியது.

இதனை தொடர்ந்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பி பிரிவில் இடம்பெற்ற பாபா அப்ரஜித்தை 10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

இந்நிலையில், டி.என்.பி.எல். ஏலம் தொடர்பாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் வழக்கமான 3 இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். அணியில் சமமான அளவுக்கு தகுதியான வீரர்கள் உள்ளனர். சஞ்சய் யாதவ், ஹரீஸ் என அடித்து ஆடும் பிளேயர்களும் உள்ளனர். பிளேயர்சுக்கு இது யூஸ்புல் தான். ஒரு பிளேயரோட டேலண்டுக்கு ஏத்த மாதிரி ஒரு பிரைஸ் வருது, அவங்களுக்கு சாலரி வருது, பிளேயர்சுக்கு இது நல்ல வின் தான் என தெரிவித்தார்.