சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செய்தார்.

தமிழ்நாட்டின் இரும்பு மங்கை என அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஐயன் லேடி என்று எழுதப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பிலும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெ.வின் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது.

செலுத்தினார். மேலும் படிக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு, ஈபிஎஸ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அப்போது பிரமாண்டமான கேக் வெட்டப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.