நான்கு ஆண்டுகளில் 157 பேர் போலீஸ் காவலில் மரணம் : தமிழ்நாடு அரசு தகவல்

Must read

சென்னை

டந்த 2012-16 இல் 157 பேர் போலீஸ் காவலில் இருந்த போது மரணம் அடைந்துள்ளதாக  தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

காவல்துறையின் காவலில் இருக்கும் போது மரணமடையும் கைதிகள் குறித்து அவர்களின் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.    அந்த மரணங்கள் அனைத்தும் தானாக ஏற்பட்டது இல்லை என அவர்கள் குறியதன் பேரில், உச்சநீதிமன்றம் இந்த காவல் நிலைய மரணங்கள் பற்றி மற்ற நீதிமன்றங்களுடன் ஆலோசனை நடத்தியது.

அதன் பின் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி அரசின் உள்துறை முதன்மை செயலர் ஒவ்வொரு மாநிலமும் காவலில் ஏற்படும் மரணங்கள் குறித்து தாங்களாகவே அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களுக்கு அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  அனத்து மாநிலங்களும் அதை பின்பற்றி விவரங்கள் அளித்து வருகின்றன.

அதன் படி தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி ஒரு அறிக்கை அளித்துள்ளது.  அந்த அறிக்கையில், ”தமிழ்நாட்டில் 2012 முதல் 2016 வரை 157 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.   அதில் 134 வழக்குகள் நீதிமன்ற விசாரணை முடிந்தவை 134 வழக்குகள் ஆகும்.  மீதமுள்ள 23 வழக்குகளில் இன்னும் நீதிமன்ற விசாரணை முடியவில்லை”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article