சென்னை,

ரக்குகளை கொண்டு செல்லும் வகையில் நாடு முழுவதும் இ.வே பில்முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டம் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் இன்று முதல் செயல்பாட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்மூலம், தமிழகத்தில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்  நாடு முழுவதும் ஒரே சீரான சேவை மற்றும் சரக்கு வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில்,  வர்த்தகத்தை மேலும் எளிமையாக்க இ -வே பில் இன்று முதல் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் அமலுக்கு வருகிறது.

 

வாகனங்களில்  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்குகளை அனுப்பும் போது இணையவழி ரசீதை எடுத்துச் செல்வது கட்டாயமாகிறது.

எதை எளிதாக்கும் வகையில்,  சரக்குகள் குறித்த விவரங்களை அனுப்புகிறவரே இ வே பில் என்ற இணைய வழி ரசீதில் சுயமாக குறிப்பிட்டு எடுத்துச் செல்லும் நடைமுறையான இ.வேல் பில் முறை  இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சரக்கு அனுப்புவோர் ewaybill.nic.in என்ற  இணையதளம் மூலமாக முன்பதிவு செய்தால் மட்டுமே இவே பில்லை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.