ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் முதல்நாள் ஆய்வு கூட்டம் தொடங்கியது

Must read

சென்னை,

திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதல்நாள்  ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.

இன்று முதல் வரும் 22ந்தேதி வரை மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்நாள் கூட்டம் தொடங்கியது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில்,  கோவை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,   தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள  உள்ளாட்சி தேர்தல்,பேருந்து கட்டணம் உயர்வு  மற்றும் நடிகர்கள் ரஜினி கமல் புதிய கட்சி தொடக்கம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

திமுக-வின் பணிகளை செம்மைப்படுத்தவும, திமுகவை மேலும் வலுப்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article