சென்னை

ரூ.. 1 கோடி மதிப்பிலான சுழல் நிதி மீனவர் நலனுக்காக உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை, இயற்கைச் சீற்றங்கள் உள்ளிட்டவைகளால பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.  ஒரு சிலர் காணாமல் போய் கிடைக்காமல் உள்ளனர். இவர்களது குடும்பம் இவர்களை இழந்து வாடி வருகின்றது. 

இவ்வாறு அவதிப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 1 கோடி மதிப்பிலான சுழல் நிதி உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது குறித்த உத்தரவை தமிழக அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறைச் செயலர் பிறப்பித்துள்ளார்  

தமிழக அரசு.கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2023 வரை கடலில் காணாமல் போன 25 மீனவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம் வழங்கபடும்  என அறிவித்துள்ளது.  தமிழக அரசு  வறுமையில் வாடும் பல மீனவர் குடும்ப நலனுக்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.