சென்னை

தமிழக அரசு டெங்கு பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக  முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர்,

”கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவலால் சுமார் 4300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.  ஆனால் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள டிங்கு பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கலாம் என்னும் அச்சம் உள்ளது. 

பொதுமக்கள் குறிப்பாகச் சிறார்கள் சுகாதார அமைச்சரின் மெத்தனம் மற்றும் சரியான புரிதல் இன்மையால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  திமுக அரசு டெங்கு பரவாமல் தடுக்க உரிய நடவடிகையை எடுக்காமல் உள்ளது.  இனியாவது அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” 

என்று தெரிவித்துள்ளார்.