சென்னை

மிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ என்னும் புதிய திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.. 

தமிழக அரசு தொடர்ந்து பல மக்கள் நலத்திட்டங்களை நடத்தி வருகிறது.   கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இதற்காகக் களத்தில் முதல்வர் என்னும் பெயரில்  பல திட்டங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த களத்தில் முதல்வர் திட்டங்களில் ஒன்றாக “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்னும் புதிய திட்டத்தை நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்த திட்டத்தின்படி இனி ஒவ்வொரு ஆட்சியரும் மாதம் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டும்.

 

திட்டத்தை அறிமுகம் செய்த முதல்வர் மு க ஸ்டாலின்,

“இது மக்களிடம் செல் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் ஆகும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட வேண்டும். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தங்கு தடையின்றி மக்களிடம் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும். நானும், அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம், குறைகளைக் கேட்டு, மக்களின் கவலையைப் போக்கி, மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்”

என்று தெரிவித்துள்ளார்.