சென்னை

மிழக அரசு நாளை. நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இந்த வருடம் தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வசதியாக நியாய விலைக் கடைகள் விடுமுறையின்றி இயங்க அரசு உத்தரவிட்டது.

எனவே கடந்த 3 ஆம் தேதிமுதல் 10 ஆம் தேதி வரை தீபாவளி பண்டிகையையொட்டி நியாய விலைக் கடைகள் அனைத்தும் தொடர்ந்து விடுமுறையின்றி இயங்கின.

இவ்வாறு தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகள் விடுமுறையின்றி இயங்கியதற்கு ஈடாக வரும் நாட்களில் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கடந்த 13-ஆம் தேதி அன்று நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தற்போது நவம்பர் 25-ம் தேதி மீண்டும் விடுமுறை விடப்படுவதாகத்  தமிழக அரசு அறிவித்தது. எனவே இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் நாளை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.