மேஷம்

பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும். ஆரோக்கியமும் அபிவிருத்தி அடையும். குடும்பத்தாருக்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். முக்கியமான பொருள்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. நினைத்த காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி உறவுகள் அன்பு கொண்டதாகஇருக்கும். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீங்க. இந்த வாரம் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீங்க. மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். பொறுமையாயிருங்க. அது உங்களுக்கு சீக்கிரத்தில் பிடிச்சுப் போகும்.

ரிஷபம்

எதிர்பாராத நிதி உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உற்சாகமாக பணியாற்றுவீங்க. ஊதிய உயர்வுக்கும் வாய்ப்பு உண்டு. தொழில், வணிகம் நல்ல படியாக நடக்கும். தாமதங்களும் தடைகளும் நீங்கும். கலைத்துறையினருக்குப் பாராட்டும், வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த வாரம் நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற சான்ஸ்கள் வந்து சேரும். தாயாரால் நன்மையும் அவங்களோட உதவியும் கெடைக்கும்.

மிதுனம்

குடும்ப சூழலும் ஓரளவுக்கு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பூமி வாங்கும் யோகம் உண்டு. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கி அவங்க உதவியும் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான சில விஷயங்கள் நடக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நிதி விஷயத்தில் நிம்மதி ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீங்க. குடும்பத்துல நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஒங்க ஆபீஸ்ல ஒங்களை ஃபாரின் போகச் சொல்லுவாங்க. ஹாப்பியா சரி சொல்லுங்க. லாபம் அள்ளும்.

கடகம்

பழைய கடன்களும் அடைந்துவிடும். கணவன் மனைவி உறவும், அன்பும் அதிகப்படும். மேலதிகாரிகள் உங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வாங்க. மனதில் இருந்த கவலைகள் நீங்கும். எதிர்பார்த்த சலுகைகளும், தொழில் வியாபார முன்னேற்றங்களும் ஏற்படும். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசால் சகாயம் உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீங்க. உங்களின் திறமைகள் வெளிப்படும். நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். மனவருத்தத்துடன் சென்ற ரிலேடிவ்ஸ் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவாங்க. பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். மாணவர் களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி சான்ஸ் உண்டாகும்.

சிம்மம்

நிதிப் பற்றாக்குறை வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே நீங்கள் பாட்டுக்கு எதையாவது கற்பனை செய்துகொண்டு எக்காரணத்தை முன்னிட்டு புதிய கடன்களை வாங்க வேண்டாம். உங்களுக்கு அவ்வப்பொழுது மனத் தடுமாற்றமும் எதிர்மறை எண்ணங்களும்  ஏற்படுமானால் அதெல்லாம் வீண் கற்பனையின் அடிப்படையில்தான் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வேலைச்சுமை அதிகமாகும். தாய்வழி உறவால் கருத்துப் புகைச்சல் இருந்தாலும் அது இயல்பாகச் சரியாகிவிடும். குடும்பத்துல இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகளுக்காக சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி நீங்கும். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீங்க. பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

கன்னி

மேலதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோரின் ஆதரவு கிட்டும். அதே சமயத்தில், வேலைச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாகவே இருக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டிவரும். ஒங்களோட பொறுமைக்கு ஓர் நற்சான்றாக மட்டுமல்ல, ஒரு சவாலாகவும் அைமயும். இரவு நேரப் பணிகள் (Night duty) அசதியை ஏற்படுத்தும். குறித்த நேரத்தில் உண்பது, உறங்கச் செல்வது, ஓய்வெடுப்பது போன்ற விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாதீங்க. யாரோடயும் வாக்குவாதம் செய்ய வேணாங்க. பெண்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் கெடைக்கறதுக்கு டிலே ஆகலாம். ஆனா கிடைச்சுடும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 24 முதல் நவம்பர் 26 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

துலாம்

நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம். பணியில் ஏற்பட்டிருந்த மனக் கசப்பு நீங்கும். வேலைக்கு முயற்சிக்கும் இந்த ராசிக்காரங்களுக்கு மனசுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள், பணியில் நிரந்தரம் செய்யப்படுவாங்க. அதிக அலைச்சலைக் குறைச்சுக்குங்க. உங்க முயற்சிகள் நன்மை தரும். நெருங்கிய உறவினர்களின் மனப்போக்கு பற்றிக் கவலைப்படாதீங்க. சீக்கிரம் சரியாயிடுவாங்க. ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தே தீரணுங்க. வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள், ஆபீசில் தாங்கள் உண்டு.. தங்கள் வேலை உண்டுன்னு கம்முன்னு கவனமா இருக்கறது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு ஏற்பட்டுவந்த பல சிரமங்கள் படிப்படியாக நீங்கும். மனசுல உற்சாகம் ஃபவுன்டன் மாதிரி வரும்.

 சந்திராஷ்டமம் : நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

ஒங்களோட பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள ஏற்ற வாரம் இதுதாங்க. பழைய கடன்கள் இருந்துச்சுன்னா, அவற்றை அடைத்து நிம்மதி பெற சாதகமாக அமைந்துள்ளன கிரக நிலைகள். அலைச்சலும் கொஞ்சம் இருக்கும்தான். சில்லறை வியாபாரிகளுக்கும் சந்தை நிலவரம் கைகொடுக்கும்! ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சு அதிகப் பணம் போடாமல் கவனமாய்ச் செயல்படுங்க. ஸ்டூடன்ட்ஸ்க்குப் படிப்பில் மிக நல்ல முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய நிலைகளில் கிரகங்கள் அமைந்துள்ளன. எக்ஸாம்ஸ்ல நல்ல மதிப்பெண்களைப் பெறுவீங்க. மேலதிகாரிகள், சக ஊழியர்களும் உங்களுடன் நியாயமாக நடந்துகொள்வாங்க. மனசுல ஏற்பட்டு வந்த கவலைகள் நீங்கும். இந்த வாரம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். அல்லது வெளியூர் வெளிநாடுன்னு போவீங்க. மகன் அல்லது மகன் ஃபாரின் போவாங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 28 முதல் டிஸம்பர் 1 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

விளையாட்டுகள், போட்டிகளில் வெற்றியை பெற்றுத் திகழ கிரகங்கள் சாதகமான நிலைகளில் வலம் வருகின்றனர். அலுவலகச் சூழ்நிலை, உற்சாகத்தை யளிக்கும். பொறுப்புகள் கூடும். மேலதிகாரிகளின் ஆதரவு நீடிக்கிறது. சிலர் அலுவலகப் பொறுப்புகள் காரணமாக, அடிக்கடி வெளியூர்ப் பயணங்களை ஏற்க நேரிடும். அத்தகைய தருணங்களில் உற்சாகமும் திருப்தியும் ஏற்படும். இந்தப் பயணங்களால் லாபமும் உண்டு. பணிகளில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஒரு சிலருக்கு, இதுவரை மறுக்கப்பட்டு வந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் இப்போது கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும். இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க.

மகரம்

மேல் படிப்பிற்காக முயற்சிக்கும் ஸ்டூடன்ட்ஸ்க்கு அவங்க எதிர்பாராமலேயே, சாதகமான சூழ்நிலைகளும், விசா, நிதியுதவி ஆகியவை அதிக சிரமப்படாமலேயே அவர்களை வந்தடையும். வியாபாரிங்களுக்குப் போட்டிகள் நீடித்தாலும், ஒங்களோட விற்பனையையும், லாபத்தையும் அவை பாதிக்காது. தொழில், வியாபார போட்டிகளை முறியடிப்பதற்கு, திறமையை உங்களோட அனுபவமே உங்களுக்குக் கொடுக்கும். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்துல இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது.

கும்பம்

சாப்பாட்டு விஷயங்கள்ல, கவனமா இருங்க. தரக்குறைவான உணவகங்களையும், நேரங்கெட்ட நேரத்தில் உண்பதையும் தவிர்த்தே ஆகணுங்க. கசப்பான கடந்த கால அனுபவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கும்படியா நிகழ்வுகள் இருக்கும். பழைய      ஃப்ரெண்ட்ஸ் சில பேரைச் சந்திச்சு மனசுவிட்டுப் பேசுவீங்க. நீங்க பிசினஸ் செய்யறவறா? அப்டீன்னா.. புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து, புதிய “ஆர்டர்கள்” கிடைப்பது, உற்சாகத்தைத் தரும். புது வேலை ஒண்ணு பார்ட் டைமாக் கெடைக்குங்க. என்ஜாய். வாழ்க்கைத் துணையும் ஜாப் விஷயத்துல சந்தோஷமான டர்னிங் பாயின்ட்டைப் பார்ப்பாரு/ பார்ப்பாங்க. பண விவகாரங்களில் கவனம் தேவை. பெண்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

மீனம்

முன்பைவிட ஓரளவு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். எவ்வித முயற்சியுமின்றி, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானமும் சற்று உயரும். பிரபல நடிகர்கள், நடிகைகள் ஆகியோரின் சந்திப்பு ஏற்படும். ஒங்களோட துறையில் உங்களுக்குப் புகழும் பெருமையும் கெடைக்கும். நிதி நிறுவனங்களின் உதவியும் தக்க தருணத்தில் கிட்டும். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும் மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும்.