திருவண்ணாமலை

திருவண்ணாமலை தேரோட்டத்தின் போது மின் கசிவால் 2 பெண்களுக்கு மின் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நேற்று திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகாரதம் தேரோட்ட,ம் நடைபெற்றது.   நேற்று மாலை 5 மணிக்கு இந்த தேரோட்டம் தொடங்கிய போது அந்த பகுதியில் உள்ள அனைத்து மின்ன் இணைப்புகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டது.

ஆயினும் தேரோட்டத்தின் போது இரு பெண்கள் மின்கசிவால் காயமடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.  இதற்கு அதிமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  எனவே தமிழக அரசு இந்த மின் கசிவு குறித்து ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், மகாரதம் நின்ற இடத்தில் இருந்து சுமார் 250 மீட்டர் தூரத்தில் இருந்த ஒர் தனியார்க்கிடையில் வைக்கப்பட்டிருந்த யு பி எஸ் கருவியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு அதனால் அந்த இரு பெண்களுக்கும் லேசான மின் அதிர்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.  அந்த இருபெண்களுக்கும் முதலுதவி அளக்கப்பட்டு தற்போது அவர்கள் மருத்துவமனையில் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.