7000
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள்   கடந்த இரண்டு மாதங்களாக  போராட்டத்தில்  ஈடுபட்டு வருவதை விரிவாக பத்திரிக்கை.காமில் தொடர்ச்சியாய் பதிவிட்டு வருகின்றோம்.
ஜூன் மாதம் 6ம் தேதி:  சட்டதிருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி
21 ஜூலை 2016: போராட்டம் நடத்தக் கூடாது: பார் கவுன்சில் எச்சரிக்கை
21 ஜூலை 2016: வழக்கறிஞர்கள் போராட்டம்: நீதிபதிகள் குழு எச்சரிக்கை
23 ஜூலை 2016: திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்: வழக்கறிஞர்கள் அறிவிப்பு
25 ஜூலை: போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்
27 ஜூலை 2016 : இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும்: வழக்கறிஞர்கள் எச்சரிக்கை
28 ஜூலை 2016: மேலும் பலரை இடைநீக்கம் செய்ய பார் கவுன்சில் முடிவு
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் 7000 போலி வழக்கறிஞர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பார் கவுன்சில் தலைவர் பி.டி.செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைந்த  பார் கவுன்சிலில் மொத்தம் 90,000 வழக்கறிஞர்கள் உள்ளனர். எனினும், 16,000 வழக்கறிஞர்கள் மட்டுமே தங்கள் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காகச் சமர்ப்பித்து உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  பார் கவுன்சில், தலைவர் டி செல்வம் கூறுகையில், ” சென்ற ஜூன் 30 ம் தேதியுடன் சான்றிதழ் சமர்பிக்க காலக்கெடு முடிவடைந்தது. எனினும் பெரும்பாலானோர் சமர்ப்பிக்க விருப்பமின்றி இருப்பது போலி வழக்கறிஞர்கள் உள்ளனர் எனும் சந்தேகத்தை உறுதி செய்கின்றது” என்றார்.
உச்ச நீதிமன்றம், சான்றிதழ் சரிபார்ப்பை இப்போது கட்டாயமாக்கியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்குத் தேதி நீட்டிக்கப்பட்டு உத்தரவிட்டுள்ளது.
1961 மற்றும் 1985 க்கு இடையில் பதிவு செய்த 2000 வக்கீல்கலின் கோப்புகள் தொலைந்துவிட்டன என்பதை பார் கவுன்சில் கண்டுபிடித்துள்ள்ளது.

fakeLawyers
நன்றி: தி நியூஸ் மினுட்

இதே போன்று, 1985 to 2016க்கு இடையில் பதிவு செய்த நூற்றுக்கணக்கான வக்கீல்கலின் கோப்புகள் தொலைந்துவிடும்” என்று எதிர்பார்க்கின்றோம்.
இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா “இந்தியாவில் 30% போலி வக்கீல்கள் உள்ளனர் என்று சமீபத்தில் கூறியது உண்மையாகிவிடும் போல் உள்ளது. இது போன்ற போலி வக்கீல்கள் தான் தங்களின் சுயலாபத்திற்காக மற்றவர்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபடுகின்றனர்” என்கிறார் தமிழ்நாடு பார்கவுன்சில் துணைத் தலைவர் எஸ். பிரபாகரன்.
உயர்ந்து வரும் போலி வக்கீல்கள் எண்ணிக்கையால் கவலைபட்ட இந்திய பார் கவுன்சில் அதிரடியாய், ” புதிய பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே சேர்ந்தவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்க அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்  உள்ளிட்ட  பெஞ்ச், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு ஆவணங்களைச் சரிபார்க்க ஒரு நீதிமன்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.