சென்னை:
ழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
bar-couns
வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோர்ட்டில் விசாரணை பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுபற்றி அகில இந்திய பார்கவுன்சில், தமிழக பார் கவுன்சிலுக்கு போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிகை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை நிறுத்திகொள்ள வேண்டும். மீறி போராட்டம் நடத்தினால் அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படும் என அதிரடி உத்தரவை தமிழ்நாடு பார்கவுன்சில் பிறப்பித்துள்ளது.