சென்னை:
மிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மீது கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் போராடி வருகிறார்கள்.

இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா
இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா

கடந்த 25ந்தேதி ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தின்போது அத்துமீறி நடந்துகொண்டதாக 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது..
5 வழக்கறிஞர்களும் விழுப்புரத்தில் 2 வாரம் தங்கியிருந்து நகர காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேளை கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் தீவிர போராட்டம் காரணமாக சட்டத்திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் கலந்துகொண்ட 126 தமிழ்நாடு வழக்கறிஞர்களை தொழில் செய்ய அதிரடியாக தடை விதித்தது.
இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சில வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய இந்திய பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இது குறித்து இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் பட்டியலை தமிழக பார் கவுன்சிலிடம் இந்திய பார் கவுன்சில் கேட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெறும் வழக்கறிஞர்களையும் சஸ்பெண்ட் செய்ய இந்திய பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. பட்டியலில் எத்தனை வழக்கறிஞர்கள் இருந்தாலும் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவது உறுதி என்று கூறியுள்ளார்.