சென்னை:
கஸ்ட் 1ந்தேதி முதல் பி.எட் படிப்புக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படுவதாக முதல்வர் தில்லைநாயகி அறிவித்து உள்ளார்.
bed
தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு உதவி பெறும் பி.எட்  கல்லூரிகள் உள்ளது. இதில் அரசு ஒதுக்கீடு 1777 – இடங்களுக்கான  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெறும்.
கலந்தாய்வு சென்னை கடறக்ரை காமராஜர் சாலையில் உள்ள விலிங்ஸ்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
இதுகுறித்து  பி.எட். கல்லூரி முதல்வர் தில்லை நாயகி கூறியதாவது:-
இந்த ஆண்டு பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை வினியோகிக்கப்பட உள்ளன.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க ஆகஸ்டு 10-ந்தேதி கடைசி நாளாகும்.
தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 10-ந்தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் கல்லூரி இணையதளமான www. ladywillingdoniase.com-ல் வெளியிடப்படும்.
பி.எட் கலந்தாய்வுக்கான விண்ணப்பகட்டணம் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை இந்த கட்டணம் ரூ.300 ஆக இருந்தது. எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும்.
பி.இ. பட்டதாரிகள் கடந்த ஆண்டு முதல் பி.எட் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்த வருடம் 220 முதல் 240 இடங்கள் பொறியியல் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த ஆண்டு பி.எட். கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்டு 3-வது வாரத்தில் சேர்க்கையை தொடங்கி ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.