தமாகா வேட்பாளர் அறிவிப்பு: தஞ்சை தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டி

Must read

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டு கடந்த 13ந்தேதி ஒப்பந்தம்  கையெழுத்தானது.

அதைத்தொடர்ந்து தமாகவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கபடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார்,.

மக்களவை தேர்தலில்  அதிமுக தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் த.மா.காவுக்கு தஞ்சை தொகுதி மட்டும் ஒதுக்கி ஒப்பந்தம் கையெத்திடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article