கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ்: உதய சூரியன் சின்னத்தில் போட்டி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Must read

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில்  உதய சூரியன் சின்னத்தில் கொமதேக கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் இணைந்தது. அதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஈஸ்வரன் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுகு வார்த்தையை தொடர்ந்து அக்கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரோட்டில் கொ.ம.தே. கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாமக்கல் தொகுதியில் கொமதேக வேட்பாளராக சின்ராஜ் போட்டி யிடுவதாக   கூட்டத்தில் அறிக்கப்பட்டது. அவர் உதய சூரியன் சின்னத்தில் களத்தில் இறங்குகிறார்.

More articles

Latest article