சென்னை: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை உள்பட மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைய்ம தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் (அல்லது) ‘ECINET’ என்ற மொபைல் செயலியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியவில்லை என்றால் ‘ECINET’ என்ற செயலியில் ‘Download e-Voter’ என்ற ஆப்ஷனில் ‘Search By Details’ என்ற ஆப்ஷனுக்குள் சென்று பெயர், பிறந்த தேதி, மாநிலம், மாவட்டம், தொகுதியின் பெயர் போன்ற சுய விவரங்களை குறிப்பிட்டு ‘வாக்காளர் எண்’ அடையாளம் காணலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாளை வாக்களிக்க தேவையான வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றார், ஆதார் அட்டை உள்பட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக்கொண்டு வாக்களிக்க முடியும்.
- ஆதார் அடையாள அட்டை,
- MNREGA பணி அடையாள அட்டை,
- வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகம்,
- தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அடையாள அட்டை,
- ஓட்டுநர் உரிமம்,
- நிரந்தர கணக்கு எண் (PAN Card) அடையாள அட்டை,
- NPR -ன் கீழ் RGI-ஆல் வழங்கப்பட்ட திறனட்டை,
- இந்திய கடவுச்சீட்டு (Passport),
- தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை,
- அரசு/பொதுப்பணித்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணி அடையாள அட்டை,
- நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினரின் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட அடையாள அட்டை,
- UDID மாற்றுத்திறனாளி அடையாள அட்டை
மேற்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.