சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி தொடர்பான தேர்தல் ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவர் (ஹெச்.ஓ.பி.எஃப்.) பதவிக்கு மூத்த ஐபிஎஸ் உயரதி காரி சந்தீப்ராய் ரத்தோரை நியமிக்க தேர்தல் ஆணையமே எடுத்த நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக அமையும் என்பதால் அந்த உத்தரவில் அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் டிஜிபி, சென்னை மாநகர காவல்ஆணையர் உள்பட பல காவல்துறையினர் ஆளும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பல அதிகாரிகளை மாற்றிய நிலையில், ஏப்ரல் 2ந்தேதி அன்று தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல்ஆணையர் அருண் உள்பட பல முக்கிய அதிகாரிகளை பணியிடம் மாற்றியது.
அதன்படி, தமிழ்நாடு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராம‘ன் மற்றும் 2 மாவட்ட ஆட்சியர்கள், 2 மாநகராட்சி காவல் ஆணையர்கள் மற்றும் ஒரு ஐஜி ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதற்கு பதிலாக புதிதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக பதவி ஏற்றார். தொடர்ந்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய காவல் ஆணையராக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் மதுரை காவல் ஆணையர் லோகநாதனும் மாற்றப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக அபிஷேக் தீக்ஷித்தை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆர்.வி. ரம்யா பாரதி மேற்கு மண்டல ஐஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் , சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக விஷ்ணு மஹாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த இளம்பகவத் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், திமுக அரசு, தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி தொடர்பான தேர்தல் ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவை திமுக குழுத் தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கு எழுதிய நான்கு பக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின் கீழ், தேர்தல்களைச் செவ்வனே நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியும். தேர்தலின்போது நடுநிலைமையைக் காக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளவும், தான் விரும்பும் உயதிகாரியை மாநில காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) நியமிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதினால், தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை, அந்த உயதிகாரியை “பொறுப்பு டிஜிபி’-ஆக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் நியமிக்க இயலும்.
மேற்கு வங்கம் போன்ற பிற தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அண்மையில் டிஜிபி மாற்றப்பட்டபோது, அங்கு “பொறுப்பு டிஜிபி’ என்றே உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய நியமனங்கள் தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை மட்டுமே செல்லுபடியாகும் என சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் முழு நேர மற்றும் காவல் படைத்தலைவராக சந்தீப் ராய் ரத்தோரை நியமிக்க தலைமைத் தேர்தல் ஆணை
யம் நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல, தமிழகத்தை மட்டும் பாகுபாட்டோடு நடத்துவது வெளிப்படையாகியிருக்கிறது. மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் நியமனத்தின்போது “பிரகாஷ் சிங் வழக்கில்’ உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும். அத்தகைய நியமன நடவடிக்கையை தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.
முழு நேர டிஜிபியை நியமிப்பதற்கான வழக்கமான நடைமுறைகள், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆட்சிக்கு வரும் அரசால் மீண்டும் தொடங்கப்படும். எனவே, உச்சநீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளை மீறியதாகக் கருதப்படும் சூழலையும், இதன்காரணமாக எழக்கூடிய சட்டச் சிக்கல்களையும் தவிர்க்கும் வகையில், சந்தீப் ராய் ரத்தோரை முழு நேர டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவராக நியமிக்க ஏப்ரல் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திருத்தத்தையோ அல்லது அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]