மருத்துவரும், ராஜபாளையம் முனிசிபல் கமிஷனருமான டாக்டர் பார்த்தசாரதி அவர்களின் இன்றைய முகநூல் பதிவு…

இனிய காலை வணக்கம். சீன பாரம்பரிய மருத்துவத்தில் நமது உடல் கடிகாரம் போல் வேலை செய்கிறது என்பர்.

அதிகாலை 3 – 5 நுரையீரலின் நேரம்,அதிகாலை 4 மணிக்கு பிறகு எழுந்து படித்தல் போன்றவற்றை செய்யலாம்.இதை தான் பிரம்ம முகூர்த்தம் என்பர்.

காலை 5 – 7 இது பெருங்குடல் நேரம், காலை 6 மணிக்குள் எழுந்தால் மலச்சிக்கல் இராது.

காலை 7-9 இது வயிறு தொடர்பான நேரம், இது காலை உணவிற்கான நேரம், ஏதேனும் ஒரு வியாதிக்காக மருந்து சாப்பிடுபவர்கள் இந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். இதற்கு பிறகு மருந்து சாப்பிட்டால் மருத்துவம் வேலை செய்யாது.

காலை 9 – 11 இது மண்ணீரலின் செயல்பாட்டுக்கான நேரம். இந்த நேரத்தில் காலை சாப்பிட்ட உணவு சீரணமாகும்.

பகல் 11- 1 இது இருதயத்திற்கான நேரம். நெஞ்சு வலி இந்த நேரத்தில் ஏற்பட்டால் அது முழுக்க இருதயத்தின் தொடர்பே, வாயு தொந்தரவு என்று மெத்தனமாக கூடாது.

மதியம் 1- 3 இது சிறுகுடல் நேரம், இது மதிய உணவிற்கான நேரம்

மாலை 3-5 இது சிறுநீர்ப்பை தொடர்பான நேரம்.

மாலை 5 – 7 இது சிறுநீரகம் தொடர்புடைய நேரம்.

இரவு 7 -9 இது இருதய உறை எனப்படும் பெரியகார்டியம் தொடர்பான நேரம். (ஆங்கில மருத்துவம் இருதய உறையை ஒரு உறுப்பாக கருதுவதில்லை).

இரவு 9 – 11 இது triple warmer எனப்படும் ஒரு கற்பனை உறுப்பு, இது உடலின் வெப்பநிலையை சமமாக இருக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நாம் தூங்க வில்லை என்றால் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் போன்றவை தோன்றலாம்.

இரவு 11 – 1 இது பித்தப்பை தொடர்பான நேரம், இந்த நேரத்தில் மார்பு வலி போன்றவை ஏற்பட்டால் பித்தப்பை கல் அடைப்பு போன்ற காரணங்களாலும் இருக்கலாம். நன்கு தூங்க வேண்டிய நேரம்.

அதிகாலை 1 -3 இது கல்லீரலுக்கான நேரம். ஒழுங்காக தூங்க வேண்டும். கல்லீரல் ஒழுங்காக செயல்பட்டால் தான் உடலின் ஒழுங்காக வெளியேறும், நச்சுத்தன்மை அகற்றப்படும்.

இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை நல்ல தூக்கம் தூக்கினால் கழிவு வெளியேற்றம் முறையாக இருக்கும்.

வாழ்க வளமுடன், வாழ்க வையகம். என்றும் இனிமை உரித்தாகட்டும்.