இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசூதி ஒன்றில் குரான் வாசித்துக் கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்தது அந்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சி.சி.டி.வி. கேமரா மற்றும் மொபைல் போன் கேமரா என்று அனைத்து இடத்திலும் அனைவரிடத்திலும் கேமரா வந்த பிறகு பல்வேறு அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் மற்றும் பலவிதமான உணர்வுகளைத் தூண்டும் வீடியோ பதிவுகள் நாளுக்கு நாள் இந்த கோடிக்கணக்கான கேமராக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தெருக்கூத்து ஆடுபவர்கள், நாடக நடிகர்கள், கபடி ஆடுபவர் என்று பலரும் நொடிப்பொழுதில் மயங்கி விழுந்து இறப்பது உள்ளிட்ட பதிவுகள் பலரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.

இளம் வயதினர், முதியோர், ஆண், பெண் ஆரோக்கியமாக ஓடி ஆடி, நடிப்பவர்கள் விளையாடுபவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பலரும் இதுபோன்று அகால மரணமடைவதை பார்க்க நேரிடும் போது பலருக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

ஆரோகியமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் திடீரென இறப்பதற்கு அவர்களது உணவு பழக்க வழக்கம் அல்லது வேறு பழக்கவழக்கங்கள் அல்லது ஏற்கனவே அவர்கள் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டவர்களா என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவருவதில்லை என்றபோதும், இதுபோன்ற அகால மரணங்கள் நெஞ்சை உலுக்குவதாகவே உள்ளது.

அப்படி, இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசூதி ஒன்றில் குரான் வாசித்துக் கொண்டிருந்த உஸ்ததா தஸ்லிமா திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.