வாஷிங்டன்: அமெரிக்காவில் கோவிட் “தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இருந்தாலும், எங்களுக்கு இன்னும் கோவிட் பிரச்சனை உள்ளது. நாங்கள் இன்னும் நிறைய வேலைகளைச் செய்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை கடந்த இரு ஆண்டுகளைக் கடந்தும் ஆட்டிப்படைத்து வற்தது. இந்த பெருந்தொற்று தற்போதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் இன்னும் சில காலம் பாதுகாப்பாக இருப்பது நல்லது என உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே காரணமாக அமைந்துள்ளது. குறுகிய காலத்தில் இந்தியா உள்பட பல நாடுகள் கண்டுபிடித்த தடுப்பூசியால்தான் பல லட்சம் மக்கள் காப்பற்றப்பட்டு உள்ளனர்.  கொரோனா தொற்றால் சீரழிந்த உலக பொருளாதாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில்  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துள்ளது. இருந்தாலும், கொரோனாவால் சில பிரச்சினை உள்ளது. அதனை ஒழிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இங்கு யாரும் மாஸ்க் அணியவில்லை. எல்லோரும் நல்ல நிலையில் இருப்பது போல் தெரிகிறது. அதனால் அது கால நிலை மாறுகிறது என்று நினைக்கிறேன். அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கடந்த வாரம், கோவிட் -19 இலிருந்து இறப்புகளின் எண்ணிக்கை மார்ச் 2020 க்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளது என்று கூறினார்.