சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசினை பெறாமல் வெளியூர் சென்றவர்கள் இன்று முதல் மீண்டும் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பொங்கலையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு உடன் ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கியது. இந்த பொங்கல் தொகுப்பு, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து 5 நாட்கள் வழங்கப்பட்டு வந்தன. அதாவது, கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை வழங்கப்பட்டது. ஆனால், பலர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கும், பலர் வெளியூர்களுக்கும் சென்ற விட்டதால், பொங்கல் பரிசு பெறாதவர்கள்,  ரேசன் கடைகளில்  இன்றமுதல் பொங்கல் பரிசு ரூ.1000 தொடர்ந்து பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.